spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டம்மியாக்கப்படும் அஜித் பவார்: மஹாராஷ்டிர அரசியலில் என்னதான் நடக்கிறது..?

டம்மியாக்கப்படும் அஜித் பவார்: மஹாராஷ்டிர அரசியலில் என்னதான் நடக்கிறது..?

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் மஹாயுதி வெற்றியில் முக்கியப் பங்காற்றிய அஜித் பவார், ஆட்சியில் பங்கு வகிப்பதில் சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது. அவரது கட்சிக்கு கொடுக்கப்பட இருந்த அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. டம்மியான துறைகளே அவரது கட்சியினருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

we-r-hiring

ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் போது நிதித்துறை அமைச்சராக இருந்தர் அஜித் பவார். இந்த முறை அஜித் பவார் வகித்த நிதித்துறையை பாஜக தன்னிடமே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அஜித் பவார், அவரது மாமனார் ஷரத்துக்கு எதிராக கட்சியை பிரித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபோது அவருக்கு மொத்தம் 40 எம்எல்ஏக்கள் இருந்தனர். 2024 சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித் 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் அஜித் பவார்ன் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில் அஜித் பவார் வலுவாக மீண்டு வந்த பிறகு, அவரது அந்தஸ்து அதிகரிக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், துறைகள் மற்றும் அமைச்சர்கள் எண்ணிக்கையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏக்நாத் ஷிண்டேவின் அரசில் அஜித் பவாருக்கு 9 அமைச்சர்கள் இருந்தனர். இப்போது புதிய அரசில் முடிவு செய்யப்பட்ட பார்முலாவின்படி அஜித்துக்கு 7 அமைச்சர் பதவிகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகளும், பாஜகவுக்கு 21 அமைச்சர் பதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மகாராஷ்டிரா தேர்தல்

கடந்த ஆட்சியில் அஜீத் பவாரின் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டது, இம்முறை அவரது கட்சியினருக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு. துணை சபாநாயகர் பதவிக்கு ஏக்நாத் ஷிண்டே கட்சி உரிமை கோரியுள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக ஷிண்டேவின் கட்சி ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சி. கடந்த அரசாங்கத்தில் ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்து, இந்த முறை தனது உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில், உள்துறை, நிதி, வருவாய், பணியாளர் மற்றும் பொதுப்பணித் துறைகள் முதல் 5 துறைகள் வலுவான துறைகளாக உள்ளன. உள்துறை, நிதி, வருவாய்த்துறை போன்ற முக்கிய துறைகளை பாஜ தன்ண்டம் வைத்துக் கொள்ளும்.

நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணித்துறை போன்ற முக்கிய அமைச்சகங்களை ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விவசாயம், நீர்ப்பாசனம், உணவு வழங்கல் போன்ற துறைகளை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் டாப்-5 துறைகளில் ஒன்று கூட அஜித்துக்கு வழங்கப்படவில்லை.

மகாராஷ்டிரா அரசியலில் நிதித்துறை தற்போது அதிகம் பேசப்படும் துறை. மகாராஷ்டிராவில் லட்கி பஹின் போன்ற பல திட்டங்களுக்கு இத்துறையில் இருந்து பணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பராமரிப்பது பெரிய சவாலாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, மாநிலத்தின் கடன் ரூ.7.82 லட்சம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதியமைச்சகத்தை தன்னுடன் வைத்துக் கொண்டு நெருக்கடி மேலாண்மை செய்ய பாஜக விரும்புகிறது. கடந்த முறை அஜித் பவார் தனது எம்எல்ஏக்களுக்கு அதிக நிதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அமைச்சரவைக் கூட்டங்களில் பலமுறை அஜித் பவார் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த முறை அப்படி ஒரு நிலை வருவதை பா.ஜ.க விரும்பவில்லை. கடன் என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் வியாழக்கிழமை மகாயுதி தலைவர்களின் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்டேவும், பாஜக சார்பில் தேவேந்திர ஃபட்னாவிசும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது அஜீத் பவார் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் பெயர்களை இறுதி செய்வார் என்று கூறப்படுகிறது. அஜித் பவார் ஒதுக்கீட்டில் இருந்த 9 அமைச்சர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த 9ல் 7-ஐ தேர்ந்தெடுப்பது அஜித்துக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

MUST READ