spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் - அரசியல் பேசுவதற்கு தடை

திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை

-

- Advertisement -

திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் - அரசியல் பேசுவதற்கு தடைதிருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும் ஆன்மீக சூழலை காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தான அறங்காலர் குழு முடிவு செய்துள்ளது.

we-r-hiring

எப்போதும் கோவிந்தா நாமத்துடன் கேட்கும் புனிதமான திருமலையில், சாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் அரசியல் தலைவர்கள் சிலர், தரிசனம் முடிந்ததும், கோவில் முன்பு செய்தியாளர்களிடம் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு பேசும்போது அரசியல் பேச்சுகளையும் விமர்சனங்களையும் செய்கின்றனர். இது திருமலையில் ஆன்மிகச் சூழலை சீர்குலைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமலையில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
எனவே திருமலைக்கு வந்து அரசியல் விமர்சனம் செய்பவர்கள், இதனை மனதில் வைத்து, திருமலையில் ஆன்மிகச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பேச்சுக்களை பேசாமல் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பார்த்து நான் வியப்படைந்தேன்…. ஜேசன் சஞ்சய் குறித்து சந்தீப் கிஷன் பேச்சு!

MUST READ