spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதகள ஆசாமிக்கு அல்வா... முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!

அதகள ஆசாமிக்கு அல்வா… முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!

-

- Advertisement -

சொந்த மாவட்டத்தில் கள ஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராகி விடக்கூடாது என ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சேலத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தை எடப்பாடியாரே தலைமையேற்று நடத்தியதாகக் கூறப்படுகிறது. போகும் இடமெல்லாம் அதகளமாக்கும் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முதலில் கூட்டத்தை நடத்துவதாக இருந்தது. சேலத்துக்கான பார்வையாளர்கள் பட்டியலிலும் திண்டுக்கல் சீனிவாசனின் பெயர்தான் இருக்கிறது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! -  இபிஎஸ் 

we-r-hiring

இது குறித்து ஊடகங்களில் அரசல், புரசலாக தகவல் பரவியது, இந்த தகவலை பொய்யாக்கி விட வேண்டும். இதற்காகவே திண்டுக்கல் சீனிவாசனை பங்கேற்கச்செய்ய வேண்டும் என்று சீனியர் பார்ட்டிகள் சிலர், எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ‘‘அப்படியே செய்து விடலாம்’’ என்று அவரும் தலையாட்டியுள்ளார்.

ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு முன்புதான், திண்டுக்கல் சீனிவாசன் நம்ம ஊருக்கு வரவில்லை என்பது உள்ளூர் நிர்வாகிகளுக்கு தெரிந்துள்ளது. தகவலை பொய்யாக்குவது முக்கியம்தான். ஆனால் சொந்த மாவட்டத்தில் நம்ம பேர் ரிப்பேர் ஆகிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாகவே திண்டுக்கல் சீனிவாசன் களஆய்வு கூட்டத்திற்கு வரவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த நிர்வாகிகள்.

MUST READ