spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்த தகவல் உண்மையானது .... பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஸ்ரீலீலா!

அந்த தகவல் உண்மையானது …. பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஸ்ரீலீலா!

-

- Advertisement -

நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

நடிகை ஶ்ரீலீலா தற்போது தெலுங்கு சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் எனும் திரைப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த தகவல் உண்மையானது .... பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஸ்ரீலீலா!அதே சமயம் அந்த படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்தப்பட்டி எனும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்திலும் கிஸ்ஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் ஸ்ரீ லீலா ராபின்ஹுட் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ லீலா பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த தகவல் உண்மையானது .... பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஸ்ரீலீலா!இந்நிலையில் நடிகை ஸ்ரீ லீலா பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அங்கு தான் பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, “ஆமாம். அது உண்மையான தகவல் தான். பாலிவுட்டில் நான் நடிக்கும் முதல் படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

MUST READ