spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

-

- Advertisement -

தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பள்ளியில் சுற்று சூழல் அணி சார்பில் பள்ளி மாணவர்களூக்கு சிட்டு குருவி வளர்ப்பதற்கான கூடுகள்வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபுமேடையில் பேசிய அவர் மனித உயிர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தான் நாங்கள் வழங்கி வந்தோம் ஆனால் இங்கு அழிந்து வரும் சிட்டு குருவிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.மேலும் திருவல்லிகேணி பகுதியில் உள்ள குதிரைகளை பராமரிக்க  போதிய வசதி இல்லை என்றதை கேள்விபட்டதும் அன்றிலிருந்து இன்று வரை அவற்றை பராமரிக்கும் பணியை தனது சொந்த செலவில் செய்து வருபவர் தான் துணை முதல்வர் என்று கூறினார்.பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

we-r-hiring

இதனை அடுத்து  பள்ளி மாணவிகள் மாணவர்கள் குருவிக்கூடு தயாரிப்பதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வகையில் கூடுகள் வழங்கப்பட்டன. வீடுகளில் மட்டுமே கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவி இனம் தற்பொழுது காணாமல் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே இருக்கிறது மனிதர்கள் வீட்டினுள்ளேயே சமைத்து உண்பதால் வெளியில்  உணவுகிடைக்காமல் தங்குவதற்கு கூடு இல்லாமலும் சிட்டுக்குருவி இடம்பெயர்ந்து விட்டதனால் காண்பதற்கு அரிய வகை ஆகிவிட்டது.

வீடுகளில் மட்டுமே கூடு கட்டி வாழும் குணமுடைய சிட்டுக்குருவி இனம் செல்போன் டவர்களின் தாக்கத்தினால் அழிந்து வருவதால் அவற்றை பாதுகாக்கும்  முயற்சியில் ஈடுபடுவது நம் அனைவரது கடமை  என்று கூறினார்.

பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

MUST READ