spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

-

- Advertisement -

பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் ‘பெஞ்சல்’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது . இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரிடர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

we-r-hiring

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் 12 வாரிசுதார்களுக்கு நிவாரணத்தொகைக்கான தலா 5 லட்சத்திற்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கி வருகின்றார்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த குடும்ப வாரிசுதாரருக்கு நிவாரண தொகை வழங்கினார்.

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

MUST READ