Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை.... கண்டனம் தெரிவித்த நடிகை ராஷ்மிகா!

அல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை…. கண்டனம் தெரிவித்த நடிகை ராஷ்மிகா!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா கண்டனம் தெரிவித்துள்ளார்.அல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை.... கண்டனம் தெரிவித்த நடிகை ராஷ்மிகா!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுடன் திரையிடப்பட்டது. அப்போது ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சென்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் அந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் இந்தப் பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 13) நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில், “நான் இப்போது பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானதும் மிகுந்த வருத்தம் அளிப்பதுமாகும். இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு தனி நபர் குற்றம் சாட்டப்படுவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த நிலை நம்ப முடியாதது. இதயத்தை உடைக்கும் வகையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ