spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்...

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

-

- Advertisement -

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம். ஏற்கனவே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எந்தெந்த வழியாக வேளச்சேரியை இணைப்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஆய்வை தொடங்கி உள்ளது.

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய  மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

சென்னையில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் இதன் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்கு அடுத்தபடியாக சென்னை புறநகரை இணைக்கும் வகையில் பல புதிய திட்டங்களையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

அதில் பூந்தமல்லியில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பருந்தூர் வரையிலும், திருமங்கலத்தில் இருந்து ஆவடி வரையிலும், சிறுசேரி லிருந்து கேளம்பாக்கம் வழியாக கிளம்பாக்கத்திற்கும் என புதிய வழித்தடத்திற்கான அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து அதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகளையும் நடத்தி வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் புதிய வழித்தடத்திற்கான திட்டம் ஒன்று ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருந்தது அதில் தாம்பரத்தில் முதல் வேளச்சேரியை இணைக்கும் புதிய வழித்தடத்திற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளது செயல்பாடுகளில் சவால் அதிகம் இருப்பதாலும் இரண்டாம் கட்ட பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் இறங்கி உள்ளது.அதில் மாதவரம் முதல் ராமாபுரம்,ஆலந்தூர் வழியாக சோளிங்கநல்லூர் வரை செல்லும் மெட்ரோ இரண்டாம் கட்ட பணியான வழித்தடம் 5-ன் இடையில் தாம்பரம்-வெளேச்சேரி வழித்தடம் வருவதால் வழித்தடம் 5 ஓடு எந்த இடத்தில் இணைப்பது, எத்தனை மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பல ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளேச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகம் (phoenix Mall) வரை கொண்டு செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இத்திட்டத்திற்கான ஆராய்ச்சி பணியில் மெட்ரோ அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனைக்கு பிறகே விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் தாம்பரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகப் பணிகளுக்காக வேளச்சேரியை நோக்கி செல்வோருக்கு இந்த திட்டம் மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ