சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நிறைவு, 203 நாட்கள் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் இத்துடன் கற்பனை கோட்டை அகழாய்வு நிறைவு பெற்றுள்ளதாக பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளாா்.புதுக்கோட்டை அடுத்த பொற்பனைக்கோட்டையில் கடந்த 2024 ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்ற வந்த இரண்டாம் கட்ட அகழாய்வு பணி 12-05-2025 நிறைவு, 203 நாட்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், சுடு மண்ணாலான மணி, செவ்வந்தி நிறக் கல் மணி, அகேட், தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூது பவள மணிகள், குளவிக் கல், சுடு மண்ணாலான காதணி, மோதிரக் கல், தந்தத்திலான பகடைக்காய், ஆட்டக்காய்கள், இரும்பு மற்றும் செப்பிலானப் பொருட்கள் என 1982 தொல்பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொற்பனைக் கோட்டை 2023-2024 (இரண்டாம் கட்டம்) அகழாய்வில் அகழ்ந்தெடுக்கும் பணி 12.05.2025 அன்று முடிவுற்று, மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது. இன்றுடன் அகழாய்வுக் குழிகள் மூடும் பணியானது துவங்கி, தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட அகழாய்வில் 533 தொல்பெருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும் கீறல் குறியீடுகளும் செங்கல் கட்டுமானங்களும் கிடைத்துள்ளன. எலும்பு முனை கருவி, தங்க மூக்குத்தி (அ) தோடு, சூதுபவள மணிகள்,”[தி] ஸ் ஸ ன்” என்ற தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு கிடைத்துள்ளது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகை பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு எண்னை ஜாடி (Torpedo Jar), ரௌலட் பானை ஓடுகள் (Rouletted ware) கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு
