spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளாா்.150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்புதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று இரவு சிதம்பரம் சென்றடைந்தாா். சிதம்பரத்தில் தங்கி இருந்த அவர், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபம்150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

we-r-hiring

 

இதைத்தொடர்ந்து சிதம்பரத்தில் உள்ள ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று நிறைவேற்றும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை துவங்கி வைத்தார். பின்னர் வழியெங்கும் பொதுமக்கள் அளித்த வரவேற்பை பெற்றுக் கொண்ட அவர், சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு பேட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்து செல்லும் போது  பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு, லால்புரத்தில் கட்டப்பட்ட எல்.இளையபெருமாள் முழு உருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு நினைவரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் சிதம்பரம் புறவழிச் சாலையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர்,

பெரியவர் எல்.இளையபெருமாள்

அருமை பெரியவர் எல்.இளையபெருமாள் நினைவரங்த்தை திறந்து வைத்து இருக்கிறேன். பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்க முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என ஒரு தனித்துறையை உருவாக்கி அதில் வந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நமது அரசு மீது நம்பிக்கை வைத்து இன்னும் ஏராளமான மனுக்கள் வந்தன. அதற்காக முதல்வரின் முகவரி என்ற துறையை உருவாக்கினேன். அடுத்தது மக்களிடம் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி 5 ஆயிரம் முகாம்கள் நடத்தி, அதில் பொதுமக்களின் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.  இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு தன்னார்வலர்களும் உங்களை வீடு தேடி வந்து சந்திப்பார்கள். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இந்த முகாம்களுக்கு வந்து விண்ணப்பங்கள் கொடுத்தால் போதும் உரிமைத்தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அரசின் திட்டங்களை கொடுப்பதுதான். இந்த திட்டத்தில் அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் உங்களைத் தேடி வரப்போகிறார்கள். இந்த முகாம்களில் மருத்துவ முகாம்களும் சேர்த்து நடைபெறும். மக்களின் தேவைகளை தீர்ப்பதுதான் திராவிட மாடல் அரசு. இங்கு பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் மக்களுக்கான உரிமைகளுக்காக போராடியவர் அவர். இந்த விழாவிற்கு வந்துள்ள தலைவர்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம். இப்படி அனைவரும் ஓரணியில் இருக்கும்போது டெல்லி காவி அணியின் எந்த திட்டமும் இங்கு பலிக்காது.

150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஐயா இளையபெருமாள். பரங்கிப்பேட்டையில் பட்டியல் சமூகத்தினர் செருப்பு அணியக்கூடாது என்று கூறியபோது அதை எதிர்த்து போராடியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இளையபெருமாள். சாதி கட்டமைப்புகள் குறித்து தீண்டாமைகளை ஆய்வு செய்து அவர் கொடுத்த அறிக்கை துல்லியத்தை வெளிப்படுத்தியது. அதனால் அந்த அறிக்கைய வெளிவரக் கூடாது என சிலர் தடுக்க பார்த்தார்கள்.

 

நாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்யக்கூடாது எனவும் நினைத்து அவரை தாக்க முயற்சித்தார்கள். ஆனால் அந்த அறிக்கையின் நகலை திமுக உறுப்பினர் செழியனிடம்  அவர் கொடுத்து வைத்திருந்தார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் கலைஞர், இந்திராகாந்தி, இளையபெருமாள் ஆகியோர் திறந்த காரில் சென்று வாக்கு சேகரித்தார்கள். கலைஞரும், இளையபெருமாளும் ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள். கடலூர் மாவட்ட பெருமைகளை சிறப்பிக்க இங்கு  நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு விதி 110 இன் கீழ் அறிவித்தேன். இது திராவிட மாடல் அரசு அவருக்கு செலுத்துகின்ற நன்றிக்கடன்.

திராவிட மாடல் அரசில்தான் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு அதிக திட்டங்களை தந்திருக்கிறோம். அப்படித்தான் காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். சாதிப் பெயரில் இன் என முடியும் சாதியை இர் என முடியும்படி மாற்றி எழுத கோரிக்கை வைத்திருக்கிறோம். விடுதிகளை சமூக விடுதி என பெயர் வைத்திருக்கிறோம் என்று பேசினாா்.

கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்பு

இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கொடுக்கன்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 75 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அறிவிக்கப்படும். இதனால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

MUST READ