spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…

-

- Advertisement -

ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசுஎன்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டனர்.

இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள். கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசுஎன்று குறிப்பிட்டுள்ளாா்.

கேரள செவிலியரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக ஒத்திவைப்பு

we-r-hiring

MUST READ