நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம் சார்பில் அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் ரிதன்யா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 15.7.2025 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப் பிரச்சனையில் தலையிடாமல், குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? என்றும் கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்து விட்டு கிடக்கிறார்களா? என அருவருக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
இது பொது வாழ்வில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழகத்தில் பெண் உரிமைக்காக போராடுகிற பெண்கள் அமைப்புகளை ஆபாசமாக பேசுவதுமாகும். இவ்வாறாக பொது வெளியில் பெண்கள் அமைப்புகளை அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ( AIDWA) மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி
