தமிழக முழுவதும் ஐஜியில் தொடங்கி சாதாரண காவலர்கள் வரை 2230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் ஐஜியில் தொடங்கி சாதாரண காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாலு ஐஜிக்கள், 2 டிஐஜிக்கள், 29 எஸ்பிக்கள், 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவானது வெளியாகி உள்ளது. இந்நிலையில் உதவி ஆய்வாளர்களுக்கு கீழான பொறுப்பில் உள்ள காவலர்கள் 2230 பேரை தமிழகம் முழுவதும் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை உயர் அதிகாரி முதல் கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தமிழக காவல்துறையில் பரபரப்பு நிலவுகிறது.

குறிப்பாக சர்ச்சையில் சிக்கிய காரணத்தினாலும், நிர்வாக காரணத்திற்காகவும், தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலும், விதிகளின் அடிப்படையிலும் இந்த பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
த வெ கவின் 2வது மாநாடு ஆரம்பம்…யாகப் பூஜைகள் இன்று தொடக்கம்…