spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இனி இலங்கை திவாலான நாடு அல்ல - ரணில் விக்கிரமசிங்கே

இனி இலங்கை திவாலான நாடு அல்ல – ரணில் விக்கிரமசிங்கே

-

- Advertisement -
இனி இலங்கை திவாலான நாடு அல்ல – ரணில் விக்கிரமசிங்கே
பொருளாதார நெருக்கடிகள் சிக்கி உள்ள இலங்கைக்கு சர்வதேச அதிகமான ஐ.எம்.எப். பெருந்தொகையை வழங்க முன் வந்துள்ளதால் இனி தங்கள் நாடு திவாலான நாடு அல்ல என்று இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசால் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைக்க முடியவில்லை. இதனால் இலங்கை திவாலானது.

we-r-hiring

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தள்ளாடிவரும் இலங்கைக்கு சர்வதே நிதியமான ஐ.எம்.எப். 93,000 கோடி ரூபாயை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இனி இலங்கை திவாலான நாடு அல்ல என்று அறிவித்துள்ளார்.

தவறான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் கடந்த ஆண்டு இலங்கை திவாலானது. இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி ரணில் விக்கிரமசிங்கே புதிய அதிபராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ