சென்னை புத்தகக் காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீராருங் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தான பாரதிதாசன் எழுதிய வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே பாடல் பாடப்பட்டது.

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாலமுரளிவர்மன் தொகுத்த ‘தமிழ் தேசியம் – ஏன்? எதற்கு? எப்படி?’ என்கிற நூலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, தமிழ்தாய் வாழ்த்து பாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலோ, இதர நிகழ்ச்சிகளிலோ தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ தமிழ்தாய் வாழ்த்தான “நீராருங் கடலுடுத்த….” பாடல் பாடப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக வாழ்த்தான வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே.. மாண்புகள் நீயே என்ற பாரதிதாசன் தமிழ்த் தாயை உருவகப்படுத்தி எழுதிய பாடல் ஒளிபரப்பபட்டது. இப்பாடல் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாகவும் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சையின் போது தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தற்போது பாடப்படும் தமிழ்தாய் வாழ்த்து இருக்காது எனவும் அதற்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்தான ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே.. மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே…’ என்கிற பாடல்தான் தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் ஒரே தமிழ்தாய் வாழ்த்தாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசின் ஆதரவிலும், நிதி உதவியிலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த புத்தக காட்சியில் தனியார் பதிப்பக நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ தமிழ்தாய் வாழ்த்தான நீராருங் கடலுடுத்த பாடல் புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது – எம்.பி ஜோதிமணி