spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்

இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்

-

- Advertisement -

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி   மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெண்கள் கும்மி அடித்து கிராமிய பாடல் பாடி உற்சாகத்துடன் கொண்டாடினர்.இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்

திருவொற்றியூர் கே வி கே குப்பத்தில் ,படவேட்டம்மன் ஆலயத்தின் முன்பு  இஸ்லாமிய இமாம், கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் எம் எல் ஏ பொங்கல் வைத்து சம்மத்துவ பொங்கல் வைத்தார். இதனை அடுத்து  தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து  சூரிய பகவானுக்கு படையலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டார்.

we-r-hiring

இதனையடுத்து  அப்பகுதி மீனவ பெண்கள் பாரம்பரிய கிராமிய  பாட்டு பாடி கும்மியடித்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்தது  மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் மீனவ பெண்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு என  2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை தொகுப்புகள் அடங்கிய   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

 

MUST READ