- Advertisement -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாள். குடியரசு துணைத் தலைவர் போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளாா். பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூழ, நாடாளுமன்றம் சென்று தேர்தல் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளாா். அதிமுக சார்பில் எம்.பி.தம்பிதுரையும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
