பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றார்.நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 21 ஆம் தேதி என்பதால் நேற்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளரை பாஜக தலைமை அறிவித்தது. அதன்படி மராட்டிய மாநில ஆளுநரான சி.பி ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்ட அவர் இன்று பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தமிழரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவிற்கு தமிழர்கள் ஆதரவு இல்லை – செல்வப்பெருந்தகை
