ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, ‘சில்வர் பார்க்’ என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69 கோடி ரூபாய்க்கு ஜெகத்ரட்சகன் வாங்கி, அவற்றை தன் மனைவி, மகன்களுக்கு மாற்றம் செய்ததாகவும், இதில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும் கூறி அமலாக்கத் துறை ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களில் சிலவற்றை முடக்கியது.
இந்த விவகாரம் குறித்து, சுங்கத்துறை ஆணையர் நடத்திய விசாரணையில், சில்வர் பார்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு, ஜெகத்ரட்சகனோ அவரது குடும்பத்தினரோ பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லை என முடிவுக்கு வந்தது.

அதேவேளையில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விளக்கம் கேட்டு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை எதிர்த்து, ஜெகத்ரட்சன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அமலக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தடை இல்லை எனக்கூறி மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயரநீதிமன்ற நீதுபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த்தோடு, விசாரணை நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி, விரைந்து உத்தரவு பிறப்பிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு, உத்தரவிட்டது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெகத்ரச்சகனுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!