தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நிறுவும்போது விபத்து. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்.
மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திடலில் 100 அடி கொடிக்கம்பத்தை த.வெ.கவினர் நிறுவ முயன்றனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது. ராட்சத கிரேனில் இருந்த கயிறு அறுந்ததாலும், போல்ட்கள் சரியாக போடப்படாததாலும் 100 அடி கொடிக்கம்பம் அப்படியே கீழே விழுந்தது. இதில் அருகில் இருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கார் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதமடைந்த காரை தார் பாய் போட்டு தவெகவினர் அப்புறப்படுத்தினர் . மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இனி கவலை வேண்டாம்…வந்துவிட்டது! குப்பைகளை அகற்றும் நவீன இயந்திரங்கள்!!
