spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது

-

- Advertisement -

கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது.பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

we-r-hiring

அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர்  இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.

தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது

MUST READ