புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்
கேரளாவில் இறந்த மகனை நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பெற்றோர் மேற்கொண்டுள்ள முயற்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் குரியாச்சிரா என்ற பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லீனா தம்பதியின் மகன் இவின். கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மருத்துவரான இவின் இசை, விளையாட்டு என்று பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தவர்.
26 வயது மகனை திடீரென இழந்து மீளா துயரத்தில் இருந்த பெற்றோர் இவினின் நினைவுகளை உயிருடன் வைத்திருக்க விரும்பினர். அதற்காக இவினின் சகோதரி கூறிய யோசனை இறந்தவரின் விவரங்கள் அடங்கிய க்யூ.ஆர். கோட் – ஐ இவின் பிரான்சிஸ் கல்லறையில் க்யூ. ஆர். கோடு ஒன்றை பதிவு செய்தனர்.
அதனை ஸ்கேன் செய்யும் போது இவினைப் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய இணைய பக்கம் தோன்றும். அதில் இவின் பிரான்சிஸ் கல்வி, விளையாட்டு, இசை ஆகிய துறைகளில் திறம்பட செயல்பட்டதற்கான வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் இறந்த தங்கள் மகனின் நினைவுகளை பெற்றோர் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். இவின் குடும்பத்தினரின் இந்த முயற்சி நிகழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கள் மகனின் திறமையை உலகறிய செய்துள்ள பெற்றோரின் முன்னெடுப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.