spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை

பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை

-

- Advertisement -

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் மாணவி தற்கொலை

 

we-r-hiring

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவர் பள்ளிக்கூட கட்டணம் செலுத்தவில்லை என்று அவரை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தடை விதித்தது மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் கம்ப்யூட்டர் ரூமில் இருக்கும் படி ஆணையிட்டது.. அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை செய்து கொண்டார்…

பெற்றோர்களே குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் அவர்களால் நல்ல நிலைமைக்கு வர முடியும் அரசு பள்ளியில் படித்த பலர் பெரிய பொறுப்புகளில் இதற்கு முன்பும் இன்றும் உள்ளனர் அதற்கு காரணம் அவர்களுடைய முயற்ச்சியை தவிர பள்ளி நிர்வாகத்தின் திறமை அல்ல..

உங்கள் தகுதிக்கு எது ஏற்றதோ அதை என்றுமே தேர்ந்தெடுங்கள் நீங்கள் செய்யும் தவறுகளால் பிஞ்சுகளின் உயிர் நொடி பொழுதில் இவ்வுலகை நீங்கிவிடும்.. பிஞ்சு போன்ற குழந்தைகள் மனதில் நாம் எதை விதைக்க வேண்டுமோ அதைத்தான் விதைக்க வேண்டும்.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் லாப நோக்கத்துடன் மட்டுமே பள்ளிகளை இயக்கி வருகின்றனர். அவர்கள் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள குழந்தைகளை கசக்கி பிழைகின்றனர்.. நாளைக்கு குழந்தைகள் டாக்டராகவும் இன்ஜினியராகவும் கலெக்டர் ஆக வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராசையை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்கிறது..

குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் தைரியத்தையும் துணிச்சலையும் பொறுமையையும் கற்றுக்கொடுங்கள்.. உங்கள் தகுதிக்கு மீறிய எதையும் அணுகாதீர்கள் . ஆபத்து உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நேரிடும் கவனமாக இருங்கள்…எனவே கவனமாக செயல்படுங்கள் பெற்றோர்களே.

செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்…  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு! 

MUST READ