spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படம் பார்க்க வந்த ஷாலினி.... ஓடி வந்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

‘விடாமுயற்சி’ படம் பார்க்க வந்த ஷாலினி…. ஓடி வந்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகை ஷாலினி விடாமுயற்சி படம் பார்க்க வந்த நிலையில் அவரை சூழ்ந்து கொண்டு ரசி ஆகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.'விடாமுயற்சி' படம் பார்க்க வந்த ஷாலினி.... ஓடி வந்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரது 62 ஆவது படமாக உருவாகி இருந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை திரையிடப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தை மீண்டும் திரையில் காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதே சமயம் திரிஷா, அனிருத், ஆதிக் ரவிச்சந்திரன், ஆரவ், அர்ஜுன் தாஸ் போன்ற திரைப் பிரபலங்களும் விடாமுயற்சி படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.

we-r-hiring

அந்த வகையில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகள் அனுஷ்கா மற்றும் தங்கை ஷாமிலி உடன் இணைந்து விடாமுயற்சி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண வந்துள்ளார். அவரைக் கண்ட ரசிகர்கள் ஓடி வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ