spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்'தமிழ்நாட்டின் துரோகி அண்ணாமலை'- எம்.பி.ஜோதிமணி அதிரடி குற்றச்சாட்டு..!

‘தமிழ்நாட்டின் துரோகி அண்ணாமலை’- எம்.பி.ஜோதிமணி அதிரடி குற்றச்சாட்டு..!

-

- Advertisement -

‘தமிழ்நாட்டின் துரோகி அண்ணாமலை’ என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட மாடலை பாஜகவின் கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாடு கூட பாராட்டுகிறார். ஊலககெங்கும் தமிழர்கள் முதல் இரண்டு இடங்களில் நிறுவனங்களில் பொறுப்புகளில் வகிக்கின்றனர்.

we-r-hiring

ஏன் மும்மொழிக் கொள்கை பேசும் ஒன்றிய பாஜக அரசு உ.பி. பீகார் ஆகிய மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் உள்ள நிலையில் 3 வது மொழி என்ன தமிழா? ஏன் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லாத நிலை தான் உள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது - எம்.பி ஜோதிமணி

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கடுமையான துரோகத்தை பாஜக அரசு செய்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் மாநிலத்திற்கு துரோகம் செய்யும் போது மக்களோடு நிற்காமல் அந்த அரசோடு நிற்கிறார். அவர் ஒரு தமிழ்நாட்டு துரோகி. பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கிட உடனே அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

MUST READ