spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கோடை காலத்தில் ஏசி பயன்பாடு – சரியான பராமரிப்பு அவசியம்!

கோடை காலத்தில் ஏசி பயன்பாடு – சரியான பராமரிப்பு அவசியம்!

-

- Advertisement -

கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், ஏசி பராமரிப்பதின் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு!கோடை காலத்தில் ஏசி பயன்பாடு – சரியான பராமரிப்பு அவசியம்!

கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம்  அதிகரித்து காணப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. குறிப்பாக தற்போது தொடங்கியுள்ள மார்ச் மாதத்தில் கத்திரி வெயிலின் அளவை உணர்வதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே எதிர்வரும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக பலரும் வீடு மற்றும் பணியிடங்களுக்கு ஏசி வாங்குவதற்காக ஏசி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

we-r-hiring

இந்த நிலையில் கோடை காலத்தில் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில்  ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஏசியினை பராமரிப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் ஏசி டெக்னீசியன்ஸ்கள். பெட்ரோல் டீசலால் இயங்கும்  ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வர்டரின் இணைப்பில் ஏசியை பயன்படுத்தக்கூடாது.கோடை காலத்தில் ஏசி பயன்பாடு – சரியான பராமரிப்பு அவசியம்!

குளிர்காலத்தில் பயன்படுத்தாத ஏசியை முறையான சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தக்கூடாது. அறையின் அனைத்து பகுதிகளுக்கும் ஏசியின் பயன்பாட்டை பெற ஏசி பயன்பாட்டில் இருக்கும் பொழுதே மின்விசிறி பயன்படுத்துவது வழக்கம் ஆனால் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர், காரணம் ஏசியும் மின்விசிறியும் ஒரே நேரத்தில் இயங்கும் பொழுது அறையில் இருக்கும் தூசிகள் ஏசியின் உட்பகுதிக்குள் சென்று இயந்திரத்தில் படிந்துவிடும் மேலும் வேகமான பயன்பாட்டை குறைத்துவிடும்.

உயர் மின்னழுத்தத்தை தாங்க முடியாத கேபிள் சுவிட்ச்களை பயன்படுத்தக் கூடாது. பெரிய அறைக்கு குறைந்த செயல் திறன் கொண்ட ஏசியை பயன்படுத்துதல் கூடாது.  ஜென்சட்டில் இணைத்தால் மின்சாரத்தை முறைப்படுத்துவதற்கான கருவியை பயன்படுத்துதல் அவசியம்.கோடை காலத்தில் ஏசி பயன்பாடு – சரியான பராமரிப்பு அவசியம்!

ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெப்லைசர் பயன்படுத்த வேண்டும். வீடுகளில் பயன்படுத்தும் ஏசியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் விடுதிகளில் பயன்படுத்தும் ஏசியை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் சர்வீஸ் செய்தல் மிகவும் முக்கியம் என்கின்றனர்.

தொழில் நிறுவனங்களில் வருடத்தின் அனைத்து நாட்களும் பயன்படுத்தப்படும் ஏசிக்கு தினசரி பராமரிப்பும் மற்றும் மாற்று ஏசியும் அவசியம் என்கிறனர். 250 வோல்ட்டை தாண்டும்போது கம்ப்ரஸர் வெடித்து அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்கின்றனர் வல்லுனர்கள்.

மேலும் மிக முக்கியமாக சரியான பராமரிப்பின்றி ஏசியை இயக்கினால் அதிகளவில் மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இதனை குறைக்கவும் ஏசியை பராமரிப்பது நல்லது. இந்த பராமரிப்பு பணிகளை தவிர்க்கும் பொழுது உயிர் சேதம் வரையிலான மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்துகின்றனர்.

கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

MUST READ