இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்யாளூர் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் – பஞ்சு தம்பதியர். இவர்கள் இருவரும் மானாமதுரையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கி கொண்டு சாஸ்தாநகரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இரவு 7 மணி அளவில் மழையும் தூறி கொண்டு இருந்த நிலையில் சாலையை கடக்க முற்பட்டபோது எதிரே மனோஜ்குமார் என்கிற இளைஞர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.