நடிகர் சிலம்பரசன் தளபதி விஜயை வரவேற்று புதிய பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு துவங்கி உள்ளார். தமிழில் சோசியல் மீடியா கிங் ஆக வலம் வரும் விஜய் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருந்தார்.


தற்போது விஜய் இன்ஸ்டாகிராம் தளத்திலும் அதிகாரப்பூர்வ கணக்கு துவங்கியுள்ளார். முதல் பதிவில் இருந்தே இன்ஸ்டாவிலும் பல புதிய சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார்.
அவர் வெளியிட்ட புகைப்படம் 3 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது. மேலும் பாலோவர்களும் 3 மில்லியனுக்கு மேல் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு தொடங்கி உள்ளதை எடுத்து சிம்பு அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வட்டாரத்தில் சிம்பு மற்றும் விஜய் இடையே நல்ல நட்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். சிம்புவின் ‘வாலு’ படம் வெளியாவில் பிரச்சனை இருந்த போது விஜய் தான் அதற்கு உதவி செய்து படம் வெளியாகச் செய்தார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் சிம்பு ‘தீ தளபதி’ பாடலை வெறித்தனமாக பாடியிருந்தார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்காக சிம்புவை புகழ்ந்து பேசினார்.
“விஜய்ணா உங்களை இன்ஸ்டாகிராம் உலகத்திற்கு வரவேற்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்தப் பதிவு இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.