spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ...

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை

-

- Advertisement -

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

we-r-hiring

மாண்டாஸ் புயல் பாதிப்பால் திருவள்ளூர், காஞ்சிபும் மாவட்டங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அதனால் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
Collector notification

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்த்தலையாறு செல்லும் வழித்தடத்தில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆலம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு
,கொரக்கந்தண்டலம் , சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புது குப்பம் கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவம்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல் சாவடி, நப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புறநகர் சடையான் குப்பம், எண்ணூர் மற்றும் கொசுத்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

MUST READ