spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் ரன் டைம் இதுதான்!

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் ரன் டைம் இதுதான்!

-

- Advertisement -

சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் ரன் டைம் இதுதான்!

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர வெங்கி அட்லூரி, வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் இவர் பீட்சா, ஜிகர்தண்டா பேட்ட ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 44 வது படமான இந்த படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், 2D நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படமானது 2025 மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகின்றன. நாளை (ஏப்ரல் 18) இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் ரன் டைம் இதுதான்!அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி 2 மணி 48 நிமிடங்கள் என்பது தான் ரெட்ரோ படத்தின் ரன் டைம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ