Homeசெய்திகள்கட்டுரைவாயை விட்ட தன்கர்! வசமாக சிக்கிய பாஜக! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

வாயை விட்ட தன்கர்! வசமாக சிக்கிய பாஜக! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

-

- Advertisement -

ஆளுநர் விவகாரம் குறித்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்து என்பது பாஜக எவ்வளவு மோசமான, எதேச்சதிகார அரசியல் கட்சி என்பதற்கு இதுவே சாட்சியாகும் என்று  விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆளுநர் விவகாரம் தொடர்பான ஜெகதிப் தங்கரின் கருத்துக்கு பதில் அளித்து ஆளுர் ஷாநவாஸ் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரம் குறித்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்து என்பது பாஜக எவ்வளவு மோசமான, எதேச்சதிகார அரசியல் கட்சி, அவர்களது ஆட்சி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும். இதே உச்சநீதிமன்றம் அவர்கள் கொண்டுவந்த சட்டத்திற்கு எல்லாம் ஒப்புதல் வழங்கியபோது அதனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

சட்டத்திற்கு புறம்பாக செய்யப்பட்ட விஷயங்களுக்கு எல்லாம் உச்சநீதிமன்றம் இவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. இன்றைக்கு உச்சநீதிமன்றம் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநர் வழக்கு மற்றும் வக்பு வழக்கில். எந்த வித சட்ட அடிப்படைகளும் இல்லாமல் ஆளுநர் செய்தது சரி என்று எப்படி நீதிமன்றத்தால் சொல்லப்படும். சட்டமன்றத்தில் இயற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற அரசு ஆளுநருக்கு அனுப்புகிறது. ஒப்புதல் தர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.ஆனால் அவர் ஒப்புதல் தராமல் தனக்கு இல்லாத அதிகாரத்தை வெளியில் காட்டுகிறார்.

ஆளுநர் பதவிக்காலம்  முடிவு - மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்!

உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு செல்கிறபோது ஆளுநர் தனக்கு அதிகாரம் உள்ளது என்று காட்டினால் விட்டு விடுவார்கள். ஆனால் சட்டம் சட்டமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்திருக்கிறது. அமைச்சரவைக்கும், முதலமைச்சருக்கும்தான் அதிகாரம் உள்ளது. முதலமைச்சர், அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில்தான் ஆளுநர் செயல்பட முடியும். அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. சட்டம் இப்படி இருக்கிறபோது வழக்கு  உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது. அப்போது உச்சநீதிமன்றம் ஒரு தீர்வு கொடுக்கிறது. அந்த தீர்ப்பு அவர்களுக்கு உடன்பாடாக இல்லை என்ற உடன் உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் பவரா? என்று கேள்வி எழுப்புகிறார்.

அப்படித்தான் நாங்களூம் கேட்கிறோம். சட்டமன்றத்தை விட சூப்பர் பவரா? அப்படி உள்ளபோது சட்டமன்றத்தில் ஒரு மசோதா, அல்லது தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என்றால் அதை காற்றில் பறக்கவிட்டால் சட்டமன்றத்திற்கான அதிகாரம் என்ன? அப்போது சட்டமன்றத்தை விட ஒரு சூப்பர் பவரா என்று கேள்வி எழுகிறது. அவர்கள் மீதான வழக்குகளில் எப்படி வெளிப்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றம்

முத்தலாக் தடை சட்டம் கொண்டுந்து காட்டிய மோடி, சபரிமலை வழக்கில் இந்து பெண்கள் கோயிலுக்குள நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் தான் சொல்லியது. அதை ஏற்றுக் கொண்டார்களா? அப்போது எவ்வளவு செலக்டிவாக செயல்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறது. அப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். அப்போது மத்திய அரசு என்ன சொல்கிறது, உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது இந்த இடத்தில் சூப்பர் பவர் யார்?

நாடாளுமன்றத்தில் அவர்களால் இயற்றி அனுப்பப்பட்ட ஒரு சட்டமாவது காலம் தாமதம் செய்யப்பட்டிருக்கிறதா? வக்பு சட்டம் நாடாளுமன்றத்தில் விடியற் காலை நிறைவேற்றப்பட்டு,  காலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றினார்கள். அந்த சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள். ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தார். அதுபோல ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்தாரா?

அப்போது இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் நடப்பதை உச்சநீதிமன்றம் பார்க்கிறது. பாஜகவுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் நடந்துகொள்கிறார்கள் என்பது தெரிவதால், சட்டப்படி உச்சநீதிமன்றம் ஒரு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதற்கு காரணம் அதீதமாக காலத்தாழ்வு செய்த ஆளுநர்கள் தான். அதை வேடிக்கை பார்க்கிற குடியரசுத் தலைவர்கள் தான் காரணம். அப்போது குடியரசுத் தலைவரும் காலத்தாழவு செய்கிறார். உச்சநீதிமன்றம் எவ்வளவோ பொறுத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ