கவின் நடிக்கும் கிஸ் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் கவின். அதைத்தொடர்ந்து இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இருப்பினும் லிப்ட், டாடா போன்ற படங்கள் கவினுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் குவிய மாஸ்க் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கவின். அந்த வகையில் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் இன்று (ஏப்ரல் 25) மாலை 6 மணி அளவில் இந்த பாடல் தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


