spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் - உள்துறை செயலாளர்

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

-

- Advertisement -

தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் - உள்துறை செயலாளர் ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, நாட்டில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணவேண்டும் என்று அனைத்து மாநில மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

we-r-hiring

இதில் காவல் துறையின் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான், பங்களாதேஷ் நைஜீரியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MUST READ