spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க நினைத்தாலும் பெயா்கள் மற்றும் அதற்கான பொருளை அறியமுடியவில்லை. தமிழ் பெயா்கள் மற்றும் அதற்கான பொருளை அறிய சரியான வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று வலைதளத்தில் நிதின் சிற்றரசு என்பவா் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை விடுத்தாா்.

வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!

we-r-hiring

 

MUST READ