கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம். இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேறியது. துணை முதலமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.
வங்கி அல்லாத பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடன் தந்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். வலுக்கட்டாய கடன் வசூலில் இருந்து நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது.
கடன் பெற்றவரை, கடன் வழங்கிய நிறுவனம் மிரட்டவோ, சொத்துகளை பறிக்கவோ கூடாது எனவும் வழிவகை செய்துள்ளது. அடாவடி கடன் வசூலால் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையில் இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜக – செல்வப்பெருந்தகை கண்டனம்!