அட்லீயின் பிரம்மாண்ட பட்ஜெட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
தற்போது இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதாவது இந்த படமானது ஹாலிவுட் ரேஞ்சில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்திருப்பதாகவும், படப்பிடிப்பை மும்பை மற்றும் வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கொடுக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லையாம். மூன்று வேடங்களில் நடிக்க உள்ளாராம்.
ஆதலால் இஇந்த படத்தில் மூன்று கதாநாயகிகளை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி ஏற்கனவே ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோர் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் மற்றுமொரு கதாநாயகி தீபிகா படுகோனாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இந்த படத்தில் யார் யார்? நடிக்கப் போகிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


