- Advertisement -
5.50 மணிநேரத்தில் சென்னை- கோவை! வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்
சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ரயில் சேவையில் பயணிகளின் வசதிக்காக பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒன்றிய ரயில்வே துறை சார்பில் வந்தே பாரத் என்னும் அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயன்பாட்டில் உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்:
- மணிக்கு 80 முதல் 90 கிமீ தூரத்திற்கு பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் அதிகபட்சம் வேகம் 160 கிமீ ஆகும்.
- சென்னை- கோவை 490 கிமி தூரத்தை 5.50 மணி நேரத்தில் சென்றடையும்
- எட்டு பெட்டிகள் கொண்ட ரயிலில் 536 இருக்கைகள் உள்ளன. வரவேற்பைப் பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்
- ஏசி சேர் கார் டிக்கெட் விலை 1215 ரூ மற்றும் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் விலை 2310ரூ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை வந்தடையும், சென்னையில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு 8.15 மணிக்கு கோவை சென்றடையும்
- முன்பதிவு தொடங்கிய உடனே முதல் இரண்டு நாட்களுக்கான டிக்கெட் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது
- நேர் எதிரே வேறு ரயில் வந்தால் 50 மீட்டர் முன்பே தானியங்கியாக நிற்கும் சென்சார் அமைப்பு இந்த ரயிலில் உள்ளது