spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு .... எங்கன்னு தெரியுமா?

விரைவில் தொடங்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு …. எங்கன்னு தெரியுமா?

-

- Advertisement -

வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விரைவில் தொடங்கும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு .... எங்கன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா, கடைசியாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இது தவிர சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அமீர், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.விரைவில் தொடங்கும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு .... எங்கன்னு தெரியுமா? இவ்வாறு படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வந்தாலும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் தாணு, வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதத்தில் மதுரையில் தொடங்கும் என அப்டேட் கொடுத்திருக்கிறார். இருப்பினும் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ