ஆளுநர் வழக்கில் குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரிய விவகாரத்தில் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தாா்.அதில், இதற்கு முன்பும் 15 முறை குடியரசு தலைவர் மூலம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆளுநர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனு தற்போது வரை தாக்கல் செய்யபடவில்லை. சீராய்வு மனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும் என்பதால் குடியரசு தலைவர் மூலம் மத்திய அரசு வருகிறது. இந்த மாறுபட்ட முறையை மத்திய அரசு கையாள்கிறது.
தீர்ப்பை கண்டிப்பாக மாற்றம் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியாது. உச்சநீதிமன்றம் அறிவுரை வேண்டுமானால் வழங்கலாம். அரசியல் சாசன பிரிவு 142 என்பது ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கானது. ஆனால் அதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. பாஜக ஆளாத மாநில அரசு தான் வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

குடியரசு தலைவர் வைத்துள்ள கோரிக்கைகள் மத்திய அரசு கூறியது போலவே உள்ளது. குடியரசு தலைவரின் இந்த கோரிக்கை கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்படும். குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய மனுவை காரணமாக காண்பித்து ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லாமல் செயல்படுகின்றன என்பதை தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகிறது. ஆளுநர் விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு கண்டிப்பாக நிறுத்தி வைக்க வாய்ப்பு இல்லை என்று கூறினாா்.
குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!