spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்.... ஆதாரம் இருக்கு .... ஆர்த்தி ரவி...

எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்…. ஆதாரம் இருக்கு …. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!

-

- Advertisement -

நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்.... ஆதாரம் இருக்கு .... ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவியும், பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ரவி பல இடங்களில், ஆர்த்தியும் தனது மாமியாரும் தன்னை அதிகாரம் செய்ததால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதற்கிடையில் பாடகி கெனிஷா தான் ரவி – ஆர்த்தியின் பிரிவிற்கு காரணம் என்று பல தகவல்கள் வெளிவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கெனிஷாவும், ரவியும் ஜோடியாக கைகோர்த்து ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்.... ஆதாரம் இருக்கு .... ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தான் ரவி, “ஜெனிஷா என் வாழ்க்கையின் ஒரு அழகான துணை. அவர்தான் என் வாழ்வில் வெளிச்சம் தந்தவர்” என்று கூறி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். மேலும் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாரின் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார், “ரவி சொல்வதெல்லாம் உண்மையில்லை. நான் அவரை என்னுடைய கடன்களுக்கு பொறுப்பேற்க சொன்னதற்கான ஆதாரம் ஒன்றை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிடட்டும். தன் மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது” என்று நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ரவியின் மனைவி ஆர்த்தியும் 5 பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “எங்களது திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணம் அல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபர் தான் காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். ‘உங்கள் வாழ்வின் ஒளி’ என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன்.

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

we-r-hiring

தனது சொத்துக்களை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறி செல்லவில்லை. நன்றாக முன்கூட்டியே மிகத் தெளிவாக திட்டமிட்டு விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து தனக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் தான் வீட்டை விட்டு சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்துடனும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையில் அவர் என் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல நினைத்திருந்தால் நேராக அவர் அடிக்கடி ‘தொலைத்த பெற்றோர்கள்’ என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். வீட்டோட மாப்பிள்ளை ஆக இருந்தேன் என்று அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை. உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரை தடுத்துருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்து இருப்பார். எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது தந்தை வழி பாட்டி- தாத்தா வீடு அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும் போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்த போது தான் ஒரு சிறு கார் விபத்து ஏற்பட்டது. ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படாத அந்த விபத்தில் சேதம் அடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள். சட்டப்படி எனக்கும் உரிமை உள்ள ஒரு இடத்தில் இருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன் என்பதுதான் உண்மை. அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார். மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதை கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் என்னுடன் துணை நிற்கும் செய்தித்துறை, சமூக ஊடகம், பொதுமக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு மிகுந்த பலம் தருகிறது. மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் பிள்ளைகள், எங்கள் வீட்டு பெரியவர்கள், என் நண்பர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை பிரச்சினையை இப்படி பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்த சூழ்நிலையில் என் சுயகௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித் தள்ள வேண்டும் என முடிவெடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். அனைத்து உண்மைகளையும் தெரிந்த ஒரே நபர் என் கணவர் எனக்காக பேச மறுக்கிறார். அவருடைய மௌனத்திற்கு பின் ஒரு நோக்கம் இருக்கிறது. அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது. நான் பலவீனமானவன் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்பு பெரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒருபோதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ