பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.
மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது.


அதேபோல்புயல் கரையை கடந்து ஆந்திரா மாநிலத்திற்கு சென்றதால் அங்கேயும் மழை வெளுத்து வாங்கியது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள நீர் தேக்கங்கள் நிரம்பி வழிந்து திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் பூண்டி ஏரி நிரம்பியுள்ளது.
இந்நிலையில் பூண்டி ஏரிக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. அது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூண்டி ஏரி வெளியேறும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்று பகுதிக்குள் வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. அதனால் வெள்ள பெருக்கு அதிகமாக இருப்பதால் ஓதப்பை தரைபபாலம் மூடப்பட்டது. அந்த பாலம் வழியாக செல்ல கூடிய ஊத்துக்கோட்டை திருவள்ளூர் போக்குவரத்து வழிதடத்தில் செல்ல கூடிய 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஓதப்பை தரைபபாலம் மூடப்பட்டதால் ஊத்துக்கோட்டையை சுற்றி உள்ள கிராம மக்கள் திருவள்ளூர் செல்ல வேண்டும் என்றால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே தரைப்பாலம் அருகே மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.