ஆந்திராவில் பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்களை பாதுகாக்க சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா தெரிவித்துள்ளாா்.ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாட்ஸ்அப் எண் அறிமுக விழா நேற்று குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள மாநில டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கான சக்தி வாட்ஸ்அப் எண் – 79934 85111 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளாா்.
பின்னர் இது குறித்து அவர் பேசுகையில், பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்கள் உடனடியாக இந்த எண்ணுக்கு அழைப்பின் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். உடனடியாக அந்த எண் எந்த இடத்தில் இருந்து மெசேஜ் பெற்ப்பட்டது என்ற தகவலை கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் பெற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன்மூலம் அந்த பெண்ணிற்கு சரியான பாதுகாப்பு அளித்து பத்திரமாக மீட்கப்படுவார்கள். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும். இதற்காக கட்டுப்பாட்டு அறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
திமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல்! அறிவாலயத்தில் நடந்த ரகசிய மீட்டிங்!
