பாமக தலைவா்கள் மோதல்களுக்கான குருமூர்த்தியின் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே பதில் அளித்து உள்ளேன். முழுக்க முழுக்க இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அல்லது குடும்ப விவகாரம் இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. ஆனால் நடுவராக சென்றிருப்பவர் யார் என்று பார்க்க வேண்டும். மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தவுள்ளதாக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ”தொடக்க காலத்தில் பாமக இடதுசாரிகளின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையயும் பெற்றது. ஆனால் வலதுசாரி அரசியலுக்கு அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை பஞ்சாயத்தார்களின் முயற்சி காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இடதுசாரி அரசியலால் தான் எழுச்சி பெற்றது என்பதை என்றும் ஜனநாயக சக்தியாக இருக்கும் அனைவரும் நன்கு அறிவார்கள். ஆனால் அது ஒரு வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது என்பது, அதன் அடிப்படையில் பஞ்சாயத்து செய்யக்கூடியவர்கள் இன்று வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறார்கள் என்பது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகியுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எந்த அடிப்படையில் இதை சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய் படிக்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்குகிறார் அது ஊக்குவிக்க கூடியது. மற்றபடி பிள்ளைகள் அவர் மீது கொண்ட அன்பு அவர் பிள்ளைகள் மீது கொண்ட அன்பும் என்ற அடிப்படையில் மட்டும் அதை பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். வேல்முருகன் எந்த பின்னணியில் இந்த கருத்தை சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.வரும் ஜூன் 14ஆம் தேதி வக்பு குறித்த சட்டத்தை எதிர்த்து “மதச்சார்பின்மை காப்போம் பேரணி”யை திருச்சிராப்பள்ளியில் மாவட்டத்தில் நடத்த உள்ளோம். வக்பு சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல். மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது என்பதை வலியுறுத்த இந்த பேரணியை விடுதலை சிறுத்தை கட்சிகள் ஒருங்கிணைக்கிறது. தமிழக தழுவிய இந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்கிறார்கள். ஜனநாயகம் சார்ந்த கட்சியினரும் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளாா்.
ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்!
