spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா”சாமி”புகழ் வில்லன் நடிகர் சீனிவாச ராவின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலை!

”சாமி”புகழ் வில்லன் நடிகர் சீனிவாச ராவின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலை!

-

- Advertisement -

காலில் காயம் ஏற்பட்ட கட்டோடு, உடல் நலக்குறைவுடன் காணப்படும் பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!”சாமி”புகழ் வில்லன் நடிகர் சீனிவாச ராவின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலை!ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இதில் இவர் இடம்பெற்றிருந்த ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தொடர்ந்து அவர் தமிழில், குத்து,ஏய்,திருப்பாச்சி,பரமசிவன்,சாமி 2, கோ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் சிறப்பு பெற்றவர். கடைசியாக 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சுவர்ண சுந்தரி’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

we-r-hiring

அதன் பிறகு, அவர் எந்தப் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவரை இல்லத்தில் சந்தித்து கோட்டா ஸ்ரீனிவாச ராவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் காணப்படும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் மிகவும் பலவீனமடைந்து காலில் காயம் ஏற்பட்டு, கட்டுடன் காணப்படுவதால், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷா வருகை, முருகன் மாநாட்டினால் பாஜகவுக்கு பலனில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்! 

MUST READ