spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

-

- Advertisement -

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 – 17 மற்றும் 2017 – 18 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக அகழாய்வு நடைபெற்று. அந்த அகழாய்வில் 351 வகையான தொண்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த 6ம் தேதி தொல்லியல் துறை சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கிவைத்தார்.

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

மேலும், இந்த பணிகள் 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இந்த வாரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ