- Advertisement -
வாடிக்கையாளர்கள் நலன் கருதி, புதிய செயலி ஒன்றை நாமக்கல் தாலுகாவில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உருவாக்கியுள்ளனா்.நாமக்கல் தாலுகாவில் உணவு விநியோகத்திற்காக புதிய செயலி ஓட்டல் உரிமையாளர்கள் உருவாக்கினாா்கள். நாமக்கல்லில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சுவிக்கி, ஜொமேட்டோ நிறுவன ஆர்டர்களை உணவு விடுதி உரிமையாளர்கள் எடுக்கவில்லை. அதிக கட்டணம் கேட்பதால் சுவிக்கி, ஜொமேட்டோ ஆர்டர்களை உணவு விடுதி உரிமையாளர்கள் எடுக்கவில்லை. வாடிக்கையாளர்கள் நலன் கருதி, புதிய செயலி ஒன்றை நாமக்கல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் உருவாக்கினர். புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இச்செயலி பல்வேறுத் தரப்பினாிடையே வரவேற்பைக் பெற்றுள்ளது.