தேர்தல் வாக்குறுதிகளை 100 க்கு 100 சதவீதம் எந்த அரசும், யார் ஆட்சியில் இருந்தாலும் நிறைவேற்றிட முடியாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும், இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து வணக்கத்தை தெரிவிக்கிறோம் என்று கூறிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ”அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவர். லண்டன் வட்டமேசை மாநாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் உடன் கலந்துகொண்டு பேசியவர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்கு உரிமை கொடுக்க வேண்டும் என வட்டமேசை மாநாட்டில் பேசியவர் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். சமூக நீதியை நிலைநாட்டவும், ஓட்டேரி இடுகாட்டில் உள்ள சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் சாலை என பெயர் சூட்டி இருப்பதை வரவேற்கிறோம் என்றும்,
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார் இதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த, அவர் விசிக தேர்தல் பணி என்பது எங்கள் கள பணிகளில் ஒன்று அதுதான் எங்கள் முழு பணி இல்லை என்றார். தேர்தல் வரும் நேரத்தில் இன்னும் அந்தப் பணி தீவிரப்படுத்தப்படும். தவெக அதிமுக இணைந்தால் பலமாக இருக்கும் என சண்முகம் பேசிய குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்து இருப்பார். ஊடகங்களின் யூகங்களுக்கு யூகமாக பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.
மேலும் 100 க்கு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை யாராக இருந்தாலும் நிறைவேற்ற முடியாது. பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட முக்கியமான ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன் நிறைவேற்றிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…