நடிகர் ரவி மோகன் படத்தில் நடிக்க பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை ஐகோா்ட்டில் மனு அளித்துள்ளது.
“ஜெயம்“ என்ற படத்தில் மூலம் நடிகா் ரவி அறிமுகமானாா். இப்படமானது ரசிகா்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் அள்ளித்தந்தது. இதன் மூலம் இவா் ”ஜெயம் ரவி“ என்று ரசிகா்களால் அன்போடு அழைக்கப்பட்டாா். இவா் பல்வேறு படங்களில் தன்னுடைய திறமையைக் காட்டி ரசிகா்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா்.
ரவிமோகன் கடந்த 2024 ஆம் ஆண்டு 2 படங்களை தயாரிக்க நடிகர் ரவி மோகனுடன் பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த இரு படங்களிலும் நடிக்க அவா் முன்பணமாக ரூ.6 கோடி வாங்கியுள்ளாா். அதனை திரும்ப தருமாறு பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை ஐகோா்ட்டில் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில், ரவி மோகன் வாங்கிய பணத்தை சொந்த செலவிற்கோ அல்லது சொந்த தயாரிப்பிற்கோ பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் ரவி மோகன் நடிக்க தடை விதிக்க வேண்டும். ரவி மோகனுக்கு கால்ஷீட் தந்தும் படத்தை தொடங்காததால், ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாக ரூ.10 கோடி தர வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…


