spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதுணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு

துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு

-

- Advertisement -

துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்புதுணை ஜனாதிபதி பதவியை உடல்நலப் பிரச்சனைகளை காரணம்காட்டி, துணை பதவியை ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் நேற்று அறிவித்தாா். இந்நலையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, JP நட்டா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவரின் ராஜினாமாவை அரசியலமைப்பு பிரிவு 67 A -ன் கீழ் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தன்கர், பிரிவு உபசார நிகழ்விலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இன்றைய ராஜ்யசபா நிகழ்விலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தில் ஒன்றிய அரசுடன் தன்கருக்கு கருத்து வேறபாடு காரணமாக ராஜினாமா செய்யததாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டார் முதல்வர்!!

we-r-hiring

MUST READ