spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

-

- Advertisement -

இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது.  லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட மறுத்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா பேட்டி அளித்துள்ளாா்.பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரும் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சேட்டன் சர்மா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். (23 டெஸ்ட், 65 ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். ஐந்தாண்டுகள் கபில் தேவ் உடன் இணைந்து விளையாடி உள்ளார்.) தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

எனது மனைவி சென்னையை சேர்ந்தவர் நானும் அவரும் தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய கோவில்களில் ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்துள்ளோம். இறைவனின் ஆசீர்வாதம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது.

we-r-hiring

இந்தியாஇங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்த கேள்விக்கு:

சமீபத்தில் ஒரு சில வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. ஆனால் மேன்செஸ்டரில் நடக்கும் போட்டிக்கு தயாராகி வருவோம். கடந்த டெஸ்ட் போட்டி நான் பார்த்ததிலேயே மிக சிறந்த ஒரு டெஸ்ட் போட்டியாக இருந்தது. இறுதி வரை போராடினோம். மேன்செஸ்டரில் சுழல் பந்துக்கு உதவும் எனவே குல்தீப் யாதவ் மூலம் மீண்டும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.

பிசிசிஐ தலைவராக யார் வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு:

அது குறித்து எனக்கு பெரிய யோசனை இல்லை. பிசிசிஐ விரைவில் அறிவிக்கும்.

லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட மறுத்தது குறித்த கேள்விக்கு:

நிச்சயமாக அது சரி. நாம் கண்டிப்பாக பாகிஸ்தானுடன் விளையாட கூடாது. சரியான முடிவு, இனி வரக்கூடிய நாட்களிலும் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது. மூத்த விளையாட்டு வீரர்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவுக்கு நான் ஆதரவு தருகிறேன்.பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய திறமையான வீரர்கள் விளையாட வாய்ப்பு கிடையாது காரணம்:

நான் வீரர்கள் தேர்வாணையத்தின் தலைவராக இருந்திருக்கிறேன். நிச்சயமாக இதில் எந்த அரசியலும் இல்லை. முறையான செயல் திட்டம் உள்ளது ரஞ்சித் டிராபி திலீப் டிராபி போன்ற ஆட்டங்களில் வீரர்களை தேர்வு செய்கிறோம். இது சிறந்த ஒரு சிஸ்டம். நானும் அதில் ஒரு அங்கம் வைத்திருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது. சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் வளர்ந்து வருகிறார்கள்.அரசு பள்ளி மாணவர்கள் கிரிக்கெட்டில் பயிற்சி பெற அரசு உதவி வேண்டுமா? என்ற கேள்விக்கு:

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் கீழ் மாவட்ட அளவிலான பயிற்சி மையங்கள் உள்ளது விளையாட விரும்பும் வீரர்கள் அங்கு சென்று முறையான பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் எதிர்காலம் குறித்த கேள்விக்கு:

ஜஸ்பிரித் பும்ரா தான் உலகின் தலைசிறந்த பவுலர். அவர் இல்லாமல் நமக்கு நிறைய டைம் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனால் கவலைப்பட தேவையில்லை. நமது இளைஞர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். எனவே பந்துவீச்சு குறித்து எந்தவித கவலையும் பட தேவையில்லை. உள்நாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதில் இன்னும் நிறைய அறிமுக வீரர்களை பார்க்கலாம்.

இளம் வீரர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு:

கடினமாக உழையுங்கள். கடின உழைப்பு இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் தேர்வு செய்யப்படுவீர்கள். அனைவருக்கும் திறமையான நன்கு விளையாட கூடிய வீரர்கள் தான் பிடிக்கும் நீங்கள் நல்ல வீரராக இருந்தால் நிச்சயம் உங்களை தவிர்க்க முடியாது.

உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார்? என்ற கேள்விக்கு:

இன்று வரை கபில் தேவ் தான் எனக்கு வழிகாட்டி. நான் 17 வயதில் அறிமுகப் போட்டி விளையாடிய போது எனக்கு முதல் கேப்டனாக இருந்தவர் சுனில் கவாஸ்கர். அவரும் எனக்கு சிறந்த வழிகாட்டி. ஒரு நாள் போட்டியில் எனது கேப்டன் கபில் தேவ். அவர்கள் இருவரும் என்னை நம்பி 17 வயதில் எனக்கு வாய்ப்பளித்தனர். அதை நான் மறக்க மாட்டேன் என சேதன் சர்மா கூறினார்.

பி.ஆர்க். பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…

MUST READ